பிரதமர் மோடி தமிழகம் வந்தார். தற்பொழுது சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ள அவரைதமிழகஆளுநர் வரவேற்றார்.முன்னதாக அவரை வரவேற்பதற்காக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பிரதமர், ரூபாய் 2,900 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரூபாய் 28,500 கோடி மதிப்பிலான ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்வில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ள இருப்பதால் திமுகவினரும் கட்சி கொடியுடன் அவரை வரவேற்க காத்திருக்கின்றனர். பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/m22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/m24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/m26.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/m25.jpg)