
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.அதிமுக- பாஜக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று முன்தினம்தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிலையில், அடுத்தபடியாக நாளை மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும்பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்பொழுதுபிரதமர் மோடி, வேட்டி சட்டை உடையில் மேற்கு வங்கத்திலிருந்துதனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். இன்று இரவு 8.45 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யவுள்ளார் மோடி. இதனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Follow Us