Advertisment

''பிரதமர் பேச வாய்ப்பில்லை'' - பாஜக சி.டி.ரவி தகவல் 

CT RAVI

Advertisment

நாளை, பிப்ரவரி 14 ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக கடந்தமாதம் 31 தேதி தகவல்கள் வெளியாகி இருந்தன.அண்மையில் டெல்லிசென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியானது. மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார் என்ற தகவலும்வெளியாகியிருந்தது.

பிப்.14 தமிழகம் வரும் பிரதமர் மோடிபிரச்சாரமும் மேற்கொள்வார் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்.14 காலை7.50 க்குபுறப்பட்டு 10.35 க்கு சென்னை வரும்பிரதமர், மூன்றுமணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார்என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காகநாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ''நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, அரசு விழாவில் கலந்துகொள்வதால் அரசியல் பேச வாய்ப்பில்லை. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஜெ.பிநாட்டாவும், அமித்ஷாவும்தான் ஈடுபடுவார்கள். அதிமுக - அமமுக இணைப்பு அவர்களதுஉட்கட்சி விவகாரம்''எனபாஜகதமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

Chennai modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe