தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுகவெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், இன்று (07.05.2021) காலை தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலினும், அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனை தொடந்து முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.