Advertisment

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பூசாரி... சோகத்தில் கிராமத்தினர்!

3

Advertisment

தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து கனமழை பொழிந்து வருகிறது. பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடும் அளவுக்கு மழையின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பாலங்களில்காட்டாற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. துறையூர் அருகே சேனப்ப நல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் பூசாரி அரிராஜ் (40). கோவில் நடையைச் சாற்றி விட்டு வீடு திரும்பிய போது ஆற்றைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டாற்று வெள்ளம் அவரை இழுத்துச் சென்றுள்ளது. துறையூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை மீட்புக்குழுவினர் அரிராஜை தேடிய பொழுது இறந்த நிலையில் இருந்தஅவரது உடலைச் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe