கோவிலில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர்!

Priest misbehaved with a woman who worked at the temple

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த கோவிலில் அர்ச்சகராக தியாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார்.அதேசமயம் இந்த கோவிலில் வள்ளி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அர்ச்சகர் தியாகராஜன், வள்ளியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அர்ச்சகர் தியாகராஜன் மீது புகார் கொடுத்ததுள்ளார். புகாரின் பேரில் அர்ச்சகர் தியாகராஜன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே தியாகராஜன் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழலில் தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் தியாகராஜன் புதுச்சேரியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளார். உடனடியாக விரைந்து சென்று அவரை கைது செய்த ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசித்திபெற்ற கோவிலில் அர்ச்சகராக இருக்கும் ஒருவர் அதே கோவிலில் வேலைபார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

temple Temple priests TIRUPATTUR
இதையும் படியுங்கள்
Subscribe