/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_96.jpg)
ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன்பாளையம்கிழக்கு முருகன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(44). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மணிகண்டன் பவானி கூடுதுறையில் பரிகார புரோகிதராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் கிடைக்காததால் பல்வேறு இடங்களில் மணிகண்டன் கடன் வாங்கி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி குடும்பத் தகராற்றில் திடீரென்று பெட்ரோலை எடுத்து தனக்குத்தானே ஊற்றி மணிகண்டன் தீ வைத்துக்கொண்டார். பின்னர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)