
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா என்பவர் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தேடிவந்தனர். இந்நிலையில், மதுரையில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமை மீட்பு என்ற பெயரில் அருமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்துகடவுள்கள், பிரதமர்,தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரைஜார்ஜ் பொன்னையாவிமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், இந்து கடவுள்களை விமர்சித்தபுகாரில் தேடப்பட்டுவந்த மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா, மதுரையில் கைது செய்யப்பட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)