Advertisment

தேவாலயத்திற்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு... பாதிரியார் கைது!

Rameswaram

Advertisment

ராமேஸ்வரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பங்குத்தந்தையாக பணியாற்றிய ஜான் ராபர்ட் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தோணித்துறை, மரவெட்டி வலசை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தவர் ஜான் ராபர்ட்(46). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தேவாலயங்களுக்கு வந்து செல்லும் மூன்று சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஆகியோருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிகளுக்கு பாதிரியார் ஜான் ராபர்ட் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதிரியார் ஜான் ராபர்ட்டை கைது செய்து போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

police Rameswaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe