தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து தமிழகத்தில் ஆவின் பாலின் விலையையும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் சார்பாக தற்போது விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் அடிப்படையில் நாளை விற்பனைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisment

ஆவின் நைஸ்எனப்படும் நீலநிற பாக்கெட்டில் உள்ள 50 மில்லி லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 20க்கும், அதிகபட்ச விலை ரூபாய் 21.50 க்கும்உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நைஸ் நீலநிற பாக்கெட் 1000 மில்லி லிட்டர் அட்டைதாரர்களுக்கு 40 ரூபாய், அதிகபட்ச விலை 43 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.

 Prices of Avin's milk rising from tomorrow ... New Invoice Release

எஸ்எம் எனும் கொழுப்பு சத்து நிறைந்த ஆவின் மேஜிக் பச்சை பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், 500 மில்லி லிட்டர் அட்டைதாரர்களுக்கு ரூபாய்22.50 க்கும், அதிகபட்ச விலை ரூபாய் 23.50 வும்உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் கிரீம் பால் ஆரஞ்சு பாக்கெட்டில் அடைக்கப்பட்டபால் 500 மில்லி லிட்டர், அட்டைதாரர்களுக்கு 22 ரூபாய் 50 பைசாவும்,அதிகபட்ச விலை 25 ரூபாய் 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் மேஜிக் ஐந்து லிட்டர் பாக்கெட் பாலின் விலை 225 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆவின் மூலம் தயாரிக்கப்படும் பால்கோவா, நெய்போன்ற பால் சார்ந்த அனைத்து பொருட்களின் விலைஅடுத்த வாரத்திலிருந்து உயர்த்தப்படும் எனவும் தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

அதேபோல் 1.5 சதவீதம் என குறைந்த கொழுப்புள்ள பால் 500 மில்லி லிட்டர் அட்டைதாரர்களுக்கு 19 ரூபாய் 50 பைசாவும், அதிகபட்ச விற்பனை விலை20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.