Advertisment

“தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Prices are low in Tamil Nadu'-Minister Thangam Tennarasu interview

Advertisment

தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறைதயாரித்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி வளர்ந்துள்ளது என்பது குறித்தான அந்த புள்ளி விவரம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்பொழுது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, '2022-23ல் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் 20.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு விலையில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு ரூபாய் 23,64,514 கோடியாக உள்ளது. இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021-22 ல் 7.92 சதவீதமாகவும் 202-23 8,19 சதவிகிதமாகவும் உள்ளது. நடப்பு விலையில் 2021-22ல் தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 15.84 சதவிகிதமாகவும், 2022-23ல் 14.16 சதவீதமாகவும் உள்ளது.

நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. கொரோனா காலத்தில்கூட இந்தியாவில் வளர்ச்சி விகிதம் மைனஸாக இருந்தபோதும் தமிழ்நாட்டில் வளர்ச்சி அதிகரித்து இருந்தது. இந்தியாவில் தனிநபர் வருமானம் 98,374 ரூபாயாக உள்ளது. தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 1,66,727 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் கால்நடை துறை சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் பங்கு மொத்த உற்பத்தியில் 12.18, மற்றும் 11.73 சதவீதமாக உள்ளன. உற்பத்தி துறையின் பங்களிப்பு 36.9 சதவீதத்தில் இருந்து 37.4 சதவீதமாக அதிகரித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக எட்டு சதவீத வளர்ச்சியைத் தமிழ்நாடு சந்தித்து வருகிறது'' என்றார்.

minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe