price of tomatoes has dropped by 10 rupees per kg!

Advertisment

கடந்த சில நாட்களாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்த தக்காளியின் விலை இன்று கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலைகிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் இன்றைய நிலையில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தக்காளி விலை ஏற்றத்தைக்கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று தக்காளி விலை 10 ரூபாய் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. நேற்று வரை ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று 10 ரூபாய் குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சில்லறைவிற்பனை கடைகளிலும் தக்காளியின் விலை குறையாலாம் எனத்தெரிகிறது.