/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1048_0.jpg)
தொடர் மழையால் தமிழகத்தில் காய்கறிகளின்விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்திருக்கும் நிலையில், பசுமை பண்ணை கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயம்ஆகியவற்றைவிற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதிகபட்சமாக ஒருவருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் மட்டத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ள இடங்களில் பசுமை பண்ணை கடைகளில் விற்பனையானது நடைபெற உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)