Skip to main content

அதிரடியாக சரிந்த  வெங்காயத்தின் விலை!

கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது சென்னை கோயம்பேட்டில் அதிரடியாக சாம்பார் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.

 

 The price of sambar onions is decrease

 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த சாம்பார் வெங்காயம் விலை, வரத்து அதிகரிப்பால்  60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கடந்த இரண்டு மாதமாக 100 ரூபாய்க்கு மேலே விற்றுக்கொண்டிருந்த பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 40 ரூபாயாக குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திராவில் இருந்து வெங்காய வரத்து அதிகரிப்பால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக  வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதை படிக்காம போயிடாதீங்க !