Advertisment

‘பால் விலை உயர்வா?’ - ஆவின் விளக்கம்

Is the price of milk high  Aavin explanation

ஆவின் டிலைட் 500 மி.லி. பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

Advertisment

இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் தொலைக்காட்சிகளில் 200 மி.லி. பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பால் இன்று முதல் ஊதா (Violet) நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து கீழ்கண்ட தெளிவுரை வழங்கப்படுகிறது.

Advertisment

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் (ஆவின்) தினசரி 41000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு, தினசரி 33700 லிட்டர் பால் பாக்கெட்டுகளாக பொது மக்கள் பயன் பெறும் வகையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது புதிய பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி ஆவின் மூலம் கவ் மில்க் (Cow Milk) அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வகை கவ் மில்க் 200 மி.லி. டிலைட் (Delite) எனும் பெயரில் ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகள் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால் (T.M), நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகள்அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

price milk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe