தக்காளியின் விலை மேலும் உயர்வு

  price of a kg of tomatoes has increased by Rs.10

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், குறைந்தவிலைக்குதக்காளியை விற்பனை செய்யவும் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒரு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தெரிவிக்கையில், “கூட்டுறவுத்துறையின் மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலையான ரூ.60க்கேதக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தக்காளியைப் பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கோயம்பேடு காய்கறிமார்கெட்டுக்குமீண்டும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் மொத்த சந்தையில் தக்காளியின் விலை மேலும்உயர்ந்துள்ளது. மொத்த சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்று வந்த தக்காளி இன்று 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளிச் சந்தைகளில் நேற்று 100 முதல் 120 ரூபாய் வரை விற்று வந்த ஒரு கிலோ தக்காளியின் விலைஇன்று130 ரூபாயாகஉயர்ந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Market tomato
இதையும் படியுங்கள்
Subscribe