Advertisment

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் எகிறிய இஞ்சி, பீன்ஸ் விலை

nn

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ. 60க்கு விற்ற பீன்ஸ் இன்று ஒரு கிலோ ரூ.120 ஆக அதிகரித்து விற்பனை ஆகிறது. இதுபோல் வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்பனை ஆகிறது.

Advertisment

இஞ்சியை பொறுத்தவரை பெங்களூரு, ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், தாளவாடி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு அதிக அளவில் வரத்தாகி வந்தது. தற்போது கடந்த சில நாட்களாகவே வரத்து குறைந்ததால் இதன் எதிரொலியாக விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஆனால், அதே நேரம் மற்ற காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலையும் ஓரளவு குறைந்துள்ளது.

Advertisment

இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:- கருப்பு அவரை - 90, பட்ட அவரை - 60, பச்சை மிளகாய் - 80, பெரிய வெங்காயம் - 15 - 20, சின்ன வெங்காயம் - 40 - 50, முட்டைகோஸ் - 20, காலிபிளவர் - 30, பீட்ரூட் - 50, கேரட்- 60, முள்ளங்கி - 30, முருங்கைக்காய் - 40, பீர்க்கங்காய் - 70, பாவைக்காய் - 55, புடலங்காய் - 40, வெண்டைக்காய் - 60, கத்திரிக்கா - 60 என விற்பனையானது.

Erode Market vegetables
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe