Skip to main content

140-ஐ தொட்டது பெரிய வெங்காயத்தின் விலை! 

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் 10 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 the price of big onions touches 140


சில்லரை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 160 ரூபாய் முதல் விற்பனையாகிறது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 180 ஆகவே தொடர்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிரடியாக சரிந்த  வெங்காயத்தின் விலை!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது சென்னை கோயம்பேட்டில் அதிரடியாக சாம்பார் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.

 

 The price of sambar onions is decrease

 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த சாம்பார் வெங்காயம் விலை, வரத்து அதிகரிப்பால்  60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கடந்த இரண்டு மாதமாக 100 ரூபாய்க்கு மேலே விற்றுக்கொண்டிருந்த பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 40 ரூபாயாக குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திராவில் இருந்து வெங்காய வரத்து அதிகரிப்பால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக  வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Next Story

கிலோ 260 ரூபாய்... உலக நாடுகளை வதைக்கும் வெங்காயம்..!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019


வெங்காயத்தின் விலை இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகின்றது. சில வாரங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை ரூ.200-க்கும் அதிகமாக சென்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பல இடங்களில் வெங்காயம் தட்டுப்பாடு நிலவியது. சில இடங்களில் வெங்காய குடோன்களில் திருட்டு சம்பவங்களும் நடைபெற்றன.



இந்தியாவில் வெங்காயத்தால் இத்தகைய தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், தற்போது மலேசியாவிலும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கடந்த சில தினங்களாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 மலேசிய ரிங்கிட் என்ற அளவில் விற்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 260 என்று விற்கப்படுகின்றது. உலக நாடுகளை வெங்காயம் ஆட்டி படைக்கும் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.