Skip to main content

ஒரு பேல் பஞ்சின் விலை ஒரு லட்சமாக உயர்ந்தது! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

The price of a bale of punch went up to a lakh!

 

ஒரே ஆண்டில் ஒரு பேல் பஞ்சின் விலை 65,000 ரூபாய் அதிகரித்து, ரூபாய் 1,00,000- யை எட்டியுள்ளது. இதனால் ஆடைகளின் விலை கடுமையாக உயரும் என்கிறார்கள் பஞ்சாலை துறையினர். 

 

கடந்த 2021- ஆம் ஆண்டு மே மாதம் 355 கிலோ எடை கொண்ட ஒரு பேல் பஞ்சின் விலை ரூபாய் 45,000 ஆக இருந்தது. தற்போது ஒரு பேல் பஞ்சின் விலை ரூபாய் 1,00,000- யைக் கடந்துள்ளது. பஞ்சு விலையேற்றம் காரணமாக, ஜவுளித்தொழில் பெரும் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக பஞ்சாலைத் துறையினர் தெரிவிக்கிறார்கள். 

 

பருத்தியின் வரலாறு காணாத விலையேற்றம், தற்போதைய நிலையில் ஆயத்த ஆடை உள்ளாடை பிரிவில் 40% வரை விலை உயர்ந்துள்ளதாகவும், இனி வரும் பண்டிகை காலங்களில் கடந்த ஆண்டை விட மக்கள் இரு மடங்கு விலை கொடுத்து, ஆடைகளை வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. 

 

பஞ்சு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பஞ்சு இருப்பின் அளவை வியாபாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் பஞ்சாலைத் துறையினர் கோருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 நூல் விலை கிலோவிற்கு 40 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிப்பு! 

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

Announcement that the price of yarn will be reduced by 40 rupees per kilo!

 

ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 40 ரூபாய் குறைக்கப்படுவதாக நூல் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

 

திருப்பூரில் 1,000- க்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடைத் தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த பல மாதங்களாகவே உயர்ந்து வருகிறது. எனவே, நூல் விலையைக் குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில், ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 40 ரூபாய் குறைக்கப்படுவதாக நூல் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

 

ரகத்திற்கு ஏற்றப்படி, ஒரு கிலோ நூல் 350 ரூபாய் முதல் 420 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வைக் காரணம் காட்டி, ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்திய நிலையில், தற்போது குறைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

 

 

Next Story

பஞ்சாலைகளைத் தொடர்ந்து இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! 

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Trade unions protest demanding continued operation of panchayats!

 

புதுச்சேரியில் உள்ள பாரதி, சுதேசி பஞ்சாலைகளை மூடும் உத்தரவை அரசு  கைவிட வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும், புதுச்சேரி ஏ.எப்.டி, பாரதி, சுதேசி, ஸ்பின்கோ, மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகிய பஞ்சாலைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கி தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி  ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சட்டமன்றம் அருகே இன்று (17/05/2022) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய அரசையும், மாநில அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இந்த பஞ்சாலைகளை மூடுவதாக உத்தரவிட்டுள்ள அரசின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தனியாக நிதி ஒதுக்கி பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.