/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/unicef.jpg)
தோழமை அமைப்புகள் மற்றும் UNICEF அமைப்பும் இணைந்து, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்காக பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் நடத்தினர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஊடகவியலாளர்களுக்கு குழந்தைகள் பற்றி ஆவணப்படுத்துதல், குழந்தைகளைப் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும்போது தரம் நிர்ணயம் மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும்போது அதை முழுமையாக சொல்வதற்கான பயிற்சிகளை UNICEF அமைப்பு, தோழமை அமைப்புடன் இணைந்து பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கத்தை ராமநாதபுரத்தில் நடத்தியது.
இதில் UNICEF ஊடக ஆலோசகர் அஜித் பெஞ்சமின் டேனியல் தோழமை அமைப்பினுடைய இயக்குனர் தேவநேயன் மூத்த பத்திரிகையாளர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கருத்தரங்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிக்கையாளர் திருமலை பேசும்போது, "குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் மற்றும் பிரச்சனைகளின் போது குழந்தைகளின் வருங்காலங்கள் பாதிக்காத வகையில் செய்தி வெளியிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பது மட்டுமின்றி, இதுபோன்ற பிரச்சனைகள் இனி சமூகத்தின் நடைபெறாமல் இருக்க பத்திரிகையாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்" என்று அறிவுரைகளை வழங்கினார். மேலும் UNICEF ஊடக ஆலோசகர் அஜித் பெஞ்சமின் டேனியல், "தற்பொழுது வரை குழந்தைகள் எவ்விதமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்" என்ற புள்ளி விவரங்களையும் எடுத்துரைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)