ADVERTISEMENT

கரோனா காலத்தில் சுதந்திரமாக விசிட் அடிக்கும் சிறுத்தைகள்... டிரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு!

04:34 PM May 25, 2020 | kalaimohan



கொடூர கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கிலிருக்கிறது தேசம். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மக்கள் அத்யாவசிய தேவையின் பொருட்டு பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வர அனுமதிக்கப்படுகிறார்கள். மதியத்திற்குமேல் கிராமங்கள் தொட்டு நகரங்கள் வரை வெறிச்சோடிக்கிடக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த வெற்றிடம் கடந்த 60 நாட்களாக தொடருவதால், குறிப்பாக மலைக் கிராமங்கள் வெறிச்சோடி இருப்பதால் மலையிலுள்ள வனவிலங்குகள் சுதந்திரமாகத் தரையிறங்கி விடுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய, நெல்லை மாவட்டத்தின் அம்பை நகரை ஒட்டிய மலைக் கிராமங்களில் காட்டு யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் தென்படத் தொடங்கியுள்ளன. தற்சமய வறட்சி காரணமாக மலையில் தண்ணீர் இல்லை. குடிநீர் தேடி வன விலங்குகள் தரையிறங்குகின்றன. அவைகளால் காட்டு விவசாய மகசூல் பாதிக்கப்படுகின்றன. உயிர் பயத்தால் மனிதர்களும் நடமாட அச்சப்படுகின்றனர். அப்படி வருகிற சிறுத்தைகள் ஆடு, நாய்களைக் கடித்துக் குதறிச் செல்கின்றன. எனவே அம்பை வனத்துறை அதிகாரிகளிடம் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம் என்கின்றனர் ஆழ்வார்குறிச்சியின் அழகப்பபுரம் கிராம விவசாயிகள்.


இதையடுத்து மக்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாக வனத்துறையினர் வைத்த கூண்டில் ஏப்ரல் முதல் வாரம் வரை அடுத்தடுத்து அட்டகாசம் செய்த 6 சிறுத்தைகள் வனத்துறையினரிடம் சிக்கின. கடந்த 15ம் தேதியும் 1 சிறுத்தை சிக்கியிருக்கிறது. பிடிபட்ட அவைகள் மலைப்பகுதியின் காட்டிற்குள் கொண்டு விடப்பட்டன. இதன் பின் பாபநாசம் வனச்சரகம் ஆலடியூர் பீட், வேம்பையாபுரம் கோரையார்குளம், செட்டிமேடு போன்ற பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து உளவறிய வனத்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

ஊரடங்கில் சுதந்திரமாக உலாவரும் வனவிலங்குகளால் கிராமத்து விலங்குகளும், விளைபொருட்களும் பாதிப்பை சந்திப்பது தொடர் நிகழ்வாகியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT