Advertisment

ஒரு பல்பை திருட உடற்பயிற்சி செய்வதுபோல் பாசாங்கு!! இணையத்தில் வைரலாகும் சிசிடிவி வீடியோ

கோவையில் ஒரு கடையின் வெளியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு சிசிடிவிவீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

cctv

cctv

அந்த சிசிடிவி வீடியோ காட்சியில் ஒரு நடுத்தர வயதுடைய ஒருவர் அதிகாலையில் ஒரு கடையின் முன் பகுதியில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டார். அந்த வீடியோவை பார்ப்போர் மனத்தில் ஒரு மனிதர் தன் உடல்மேல் உள்ள அக்கறையில் அதுவும் அதிகாலை நேரத்தில்இப்படி உடற்பயிற்சி செய்கிறாரே என தோன்றும் அளவிற்கு இருந்தது.

Advertisment

தீடீரென்று அந்த மனிதர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கேதொங்கிக்கொண்டிருந்த பல்பை பிடித்து தொங்கிக்கொண்டு கிட்டத்தட்ட அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்தார் என்ன ஒரு ஈடுபாடு என நினைக்கும் நேரத்தில் அந்த பல்பை அப்படியே லாவகமாக திருடி தனது லோயர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நகர்ந்தார்.

அப்பொழுது இவ்வளவு உடற்பயிற்சி பாசாங்கும் அந்த பல்பை திருடத்தானா? என்று இருந்தது. அப்படி ஒரு லாவகத்தை காட்டி பல்பை திருடியுள்ளார். இந்த வீடியோசிரிப்பையும் இப்படியெல்லாமா நாட்டில் நடக்கிறது என எண்ணும் வகையில் இணையத்தை கலக்கி வருகிறது.

funny CCTV footage
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe