Advertisment

பிஜேபி மீது ஜனாதிபதி நடவடிக்கை; தமிழகம் முழுவதும் கலெக்டரிடம் புகார் கொடுக்கும் காங்கிரஸ்!!

ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா முழுவதும் போராட்டம் ஆர்பாட்டம் நடத்தி கொண்டி இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

Advertisment

bjp

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேசிய தலைவர்கள் துணையோடு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எல்லாம் இணைந்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

அந்த வரிசையில் இன்று திருச்சி காங்கிரஸ் கமிட்டியின் சார்பி்ல் ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு திருச்சி ஆட்சியர் அவர்களிடம் திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பாக மனு கொடுக்க சென்ற போது அவர் இவர் வருகின்ற நேரம் பார்த்து வெளியே சென்று விட இவர்களிடம் மனு யார் வாங்குவது என்கிற குழப்பம் ஏற்பட கடைசியில் கலெக்டரின் பிரதிநிதியிடம் புகார் மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும் கொடுத்து வந்தனர்.

bjp

இந்த புகார் மனு கொடுங்க மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர்,தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்த ராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலை ,மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் .மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபால்,மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி, மகிளா காங்கிரஸ் இணை செயலாளர் ஜெயப்ரியா ,மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி கௌரி, வடக்கு மாவட்ட தலைவி மோகாம்பாள் ,தெற்கு மாவட்ட தலைவி சரோஜா தேவி மற்றும் தெற்கு மாவட்ட துணை தலைவர் எழிலரசன் என காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர்.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் அந்த அந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கலெக்டர் அலுவலங்களில் புகார் மனு கொடுக்கப்பட்டு வருகிறது.

congress President
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe