ioக

Advertisment

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் பரிந்துரை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மேலும், இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.