President to tour Tamil Nadu for five days

Advertisment

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 05.00 மணிக்குத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் விழாவில், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படத்தைத் திறந்துவைக்கிறார். பின்னர் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை சென்னை, நீலகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிக நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.