Advertisment

சென்னை வந்தடைந்த குடியரசுத் தலைவர்; தமிழக முதல்வர் வரவேற்பு

The President of the Republic arrived in Chennai; Welcome by Tamil Nadu Chief Minister

இரண்டு நாள் பயணமாகக்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்துள்ளார்.

Advertisment

சென்னையை அடுத்துள்ள உத்தண்டியில் அமைந்துள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை (27.11.2023) நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகப் பெங்களூருவில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை சென்னை வந்தடைந்தார். சென்னை வந்து சேர்ந்த குடியரசுத்தலைவரைத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,ஆளுநர்ஆர்.என். ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த வரவேற்பில் மணிமேகலை நூலின் ஆங்கிலப் பாதிப்பை குடியரசுத்தலைவருக்குத்தமிழக முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, பொன்முடி, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment

சென்னை விமான நிலையத்தில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

tngovt Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe