சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று (24/07/2021) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படத்தை ஆகஸ்ட் 2- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ளும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த திறந்து வைக்கிறார்.படத்திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்க பாகுபாடு இன்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.