Advertisment

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை

President Draupadi Murmu visits Tamil Nadu

Advertisment

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டுநாள் பயணமாக இன்று மாலை சென்னை வருகிறார்.

சென்னையை அடுத்துள்ள உத்தண்டியில் அமைந்துள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை (27.11.2023) நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை சென்னை வருகிறார். மாலை 6.50 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

மாலை 6.50 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்கிருந்து சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடஙகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe