காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் ஜனாதிபதி - சென்னையில் பலத்த பாதுகாப்பு

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடல் நிலை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக சினிமா பிரபலங்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்பட பலரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (ஆகஸ்ட் 5-ம் தேதி) சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து காவேரி மருத்துவமனை வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தலைவர் வருவதையொட்டி இன்று காவேரி மருத்துவமனையில் ஒத்திகைப் பார்க்கப்பட்டது.

Chennai comes President
இதையும் படியுங்கள்
Subscribe