
அண்மைக்காலமாக திருமண நிகழ்வுகளின் போது மணமக்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் திடீர் திடீரென இணையத்தில் வைரல் ஆவது வழக்கம். தாங்கள் கொடுக்கும் பரிசுப்பொருட்கள் இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக மணமக்களின் நண்பர்கள் சில நூதன முறைகளைக் கையாளுகின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வின் போது மணமக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கேன் பரிசளிக்கப்பட்டது. அதேபோல் வெங்காய விலை உயர்வின்போது பெரிய வெங்காயம் கிலோ கணக்கில் பரிசளிக்கப்பட்டதுபோன்றவை சமூக வலைதளங்களில் வைரலகி இருந்தது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் திருமண நிகழ்வு ஒன்றின் போது மணமக்களுக்கு மணமகனின் நண்பர்கள் விலை உயர்ந்த மது பாட்டிலை மேடையில் பரிசளித்தது தொடர்பான காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது. இப்படி வெளிப்படையாக மணமேடையில் மணமக்களுக்கு மது பாட்டில்பரிசளித்திருக்கும் சம்பவத்தைநெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)