Skip to main content

ஈரோடு புத்தகத் திருவிழா - 2023; ஏற்பாடுகள் தீவிரம்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

Preparations for the Erode Book Festival are in full swing

 

திருவிழாக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர், கூடாரம் எழுப்புவோர், ஒலி, ஒளி அமைப்போர், விளம்பரம் செய்வோர், புத்தகச்சுமை தூக்குவோர், சுகாதாரப் பணி மேற்கொள்வோர், நாற்காலிகள் போடுவோர், மின்பொறியாளர்கள், புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள், அச்சுப்பணி சார்ந்தோர், செக்யூரிட்டி, பார்க்கிங் என ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய கூட்டம் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் நேற்று (13.07.2023) நடைபெற்றது.

 

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் தனித்தன்மை பற்றியும், அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து புத்தகத் திருவிழாவின் சிறப்புக்கும் வெற்றிக்கும் மக்கள் பயன்பாட்டிற்கும் பாடுபட வேண்டியதன் அவசியம் பற்றியும் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் விளக்கவுரையாற்றினார். பேரவையின் செயலாளர் ந.அன்பரசு வரவேற்றார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.தங்கவேலு நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்றோர் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

 

மேலும் வளரும் தலைமுறை, பள்ளிப் பருவத்திலிருந்தே பாடப்புத்தகங்களோடு சேர்த்து தரமான பொதுப் புத்தகங்களையும் வாசித்து அறிவிற்சிறந்தவர்களாகவும், பண்பில் மேம்பட்டவர்களாகவும் அறிவியல், இலக்கியம், வரலாறு,மொழியியல், அரசியல் போன்றவற்றில் ஆழத்தடம் பதித்து, உலகப் பார்வை உள்ளவர்களாகவும் பேச்சு, எழுத்து உள்ளிட்ட பல்வகைத் தனித்திறன்களை வளர்த்துக் கொள்பவர்களாகவும் விளங்க வேண்டும் என்பதே மக்கள் சிந்தனைப் பேரவையின் எதிர்பார்ப்பு; நம்பிக்கை. இந்த இலட்சியத்தை மனதில் கொண்டு மாணவர்களுக்கான பல்வேறு தனிச்சிறப்புத் திட்டங்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவின் தொடக்க காலத்திலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Preparations for the Erode Book Festival are in full swing

 

அவற்றுள் ஒன்று 'நூல் ஆர்வலர் சான்றிதழ் வழங்கும் திட்டம்’. அதன்படி ஈரோடு புத்தகத் திருவிழாவில் ரூ. 250க்கு புத்தகங்களை வாங்கும் மாணவர்களுக்கு நூல்களின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு விழா அரங்கிலேயே 'நூல் ஆர்வலர்′ என்ற சான்றிதழ் பேரவையின் சார்பில் வழங்கப்படுகின்றது. இத்திட்டம் பல ஆண்டுகளாக ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடைமுறையில் இருந்து வருகின்றது. பல்லாயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் இச்சான்றிதழை பெற்று மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? - அதிரவைக்கும் சோக சம்பவம்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
A disabled woman was assaulted?-A shocking incident


ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பூசாரிப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர்கள் ராமன்-பழனாள் தம்பதி. மனைவி பழனாள் அஞ்சனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூன்று மகளுக்கும், ஒரு மகனுக்கும், திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

கடைசி மகள் கவிதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 32 வயது ஆகிறது மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய் பழனாளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் கவிதா திடீரென மாயமானார். அவரை அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. நம்பியூர் அருகே இருகாலூர் சமத்துவபுரத்தில் உள்ள ரமேஷ் என்பவர் வீட்டின் கட்டிலில் கவிதா ஆடை இல்லாத நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவிதா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடைகளற்ற நிலையில் செல்லம்மாள் பிணமாக கிடந்ததால் அவர் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கவிதா இறந்து கிடந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகு தான் கவிதா எவ்வாறு இறந்தார்? என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

நான்கு நாட்களாக மின்தடை; இருளில் மூழ்கிய 50 மலைக் கிராமங்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Power outage for four days; 50 hill villages plunged into darkness

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைக்கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர்ப் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைபட்டது. மலைக்கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் 4- வது நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மலைக்கிராமங்களான கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர்,கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி,காளிதிம்பம்,தடசலட்டி என 50 மேற்பட்ட மலைக் கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது .மின் தடையால் ஊராட்சிக்குச் செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகே உள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர்.

இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரைக் குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவும், சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.