Advertisment

யாருடனும் ஒப்பிட முடியாது எங்கள் பலம் மக்களுக்கு தெரியும்- பிரேமலதா விஜயகாந்த்!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது பேசுகையில் ,

Advertisment

தொடர்ந்து மார்ச் 6ஆம் தேதி வரைக்கும் விருப்பமனு தலைமை கழகத்தில் தரப்படும் அதற்குப் பிறகு

dmdk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கேப்டன் அவர்கள் எந்த தொகுதிக்கு எந்த வேட்பாளர் என்பதை உரிய முறையில் தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அதன்பிறகு வரும். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதுதான் இன்றைய தலைப்புச் செய்தியாக உள்ளது. தேமுதிகவை பொருத்தவரைக்கும் எங்களுடைய பலம் எங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து மட்டும் விவாதம் செய்வதும், அதை வைத்து குறைத்து மதிப்பிடுவதும் யாருமே என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தேமுதிகவின் பலம் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, கடைக்கோடி மக்களுக்கும் தெரியும். இன்று எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளுக்கும் தேமுதிகவின் பலம்தெரியும். இதுதான் உண்மை. இதுதான் எதார்த்தமான நிலவரம். அப்படி இருக்கையில் தேமுதிகவின் எங்களுடைய திறனுக்கு தகுந்த ஒரு கௌரவமான இடங்கள் கிடைக்கும்பொழுதுதான் நாங்கள் முடிவெடுப்போம்.

அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தேமுதிகவைப் பொறுத்தவரை எந்த கட்சியுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. எங்கள் பலம் எல்லோருக்கும் தெரியும் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான தேமுதிகவும் ஒன்று எனவே இந்த தேர்தல் தேமுதிகவிற்கு பெரிய வெற்றி கிடைக்கும் வகையில் அமையும். யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார் என கூறினார்.

premalatha vijayakanth vijayakanth dmdk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe