Advertisment

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நாளை அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்

vi

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தேமுதிக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்குவது சம்மந்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

Advertisment

’’கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேமுதிக சார்பில் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை (19.11.2018) காலை நேரடியாக சென்று பார்வையிட்டு, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க இருக்கின்றார். “இயன்றதை செய்வோம்! இல்லாதவற்கே” என்ற தேமுதிகவின் கொள்கைப்படி உணவு, உடை, மருத்துவ வசதி, குடிதண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், அவர்களுடைய துயரத்தில் பங்கேற்கின்றார். மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மற்ற மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அவரவர்களால் முடிந்த உதவிகளை செய்யவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.’’

Advertisment
premalatha vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe