Advertisment

“வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” - விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakanth on Vijayakanth's health No one should believe rumours” -

Advertisment

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் அதனால் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், அதனை நம்பவும் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe