சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமைக் கழகத்தில் 24.05.2020 மாலை 5 மணிக்குதே.மு.தி.க பொருளாளர்பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் ரமலான் உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
அதன்படி ரம்ஜான் தினத்தை முன்னிட்டு இன்று (24.05.2020) இஸ்லாமிய பெருமக்களுக்கும், ஏழை, எளிய பொதுமக்களுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், ஐந்து வகையான காய்கறிகள், சேலை போன்ற நிவாரண நலத்திட்ட பொருட்களை தே.மு.தி.க. கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.