Advertisment

ஊரடங்கில் வறுமையால் வாடுபவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நிவாரண உதவி!

Premalatha Vijayakanth - Corona Relief

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் தேமுதிக சார்பில் கரோனா ஊரடங்கு உத்தரவினால் கஷ்டப்படும் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைசேர்ந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisment

இதற்கு விழுப்புரம் தேமுதிக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு தூய்மைபணியாளர்கள், காவலர்கள்,திருநங்கைகள், சலவை தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விதவைகள் உள்ளிட்ட 300 பேருக்குஅரிசி, காய்கறிகள், மளிகைபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

Advertisment

அப்போது அவருடன் தேமுதிக துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி. தேமுதிக திருவெண்ணைநல்லூர் ஒன்றிய கழக செயலாளர்கள் ஏழுமலை, ராமச்சந்திரன், நகர செயலாளர் அச்சு முருகன், ஒன்றிய தலைவர்கள் இளங்கோ, கரிகாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

corona virus premalatha vijayakanth relief
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe