கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சிதம்பரத்தில் தங்கியுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
புதன்கிழமை சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில், நடராஜர் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். நடராஜர் கோயிலுக்கு சென்ற அவரிடம், விஜயகாந்தை கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு அழைத்து வருமாறு கூறினார். அதன்படி கோவில் தரிசனத்திற்கு விஜயகாந்தை அழைத்து வருவதாக பிரேமலதா கூறினார். இதனைத்தொடர்ந்து மதிய உணவை முடித்துக்கொண்டு நாகை மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்றார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">