Premalatha Vijayakanth about jayasree issue

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைசேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ தீ வைத்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு, அந்த குடும்பத்திற்கு நிவாரண தொகையை அளித்து வருகின்றனர்.

Advertisment

தமிழக அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் 5 லட்சத்திற்கான காசோலை வழங்கியுள்ளார். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி 50 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் முருகன் ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளார். விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

Advertisment

இன்று தேமுதிக கட்சி சார்பில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை அளித்துள்ளார். பின்னர் மாணவி ஜெயஸ்ரீயை கொன்றவர்களை என்கவுண்டர் செய்யவேண்டும். அப்படி செய்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அது ஒரு பாடமாக அமையும் என தெரிவித்தார்.