Advertisment

பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்

Premalatha letter to Prime Minister Modi

Advertisment

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

nn

Advertisment

தமிழக அளவிலான அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாது, இந்திய அளவில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் விஜயகாந்த் மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்கள் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 'அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதும் உங்களுக்கும் விஜயகாந்த்துக்கும் இடையேயான நட்பு வரலாற்றில் பொறிக்கப்படும். அவருக்கு புகழாரம் சூட்டிய உங்களுக்கு எங்களது குடும்பத்தினர் நன்றிக்கடன் பட்டுள்ளனர்' என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .

modi
இதையும் படியுங்கள்
Subscribe