ADVERTISEMENT

காசிக்கு பறந்த பிரேமலதா! லண்டன் ப்ரோகிராம் ரத்து! 

01:14 PM Nov 12, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உடல்நலக்குறைவால் கடந்த சில வருடங்களாக வீட்டில் இருந்துவருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தமிழ்நாட்டில் சிகிச்சை எடுத்த விஜயகாந்துக்கு வெளிநாடுகளிலும் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. உடல்நலம் தேறினாலும் அரசியல் பணிகளை அவரால் கவனிக்க முடியவில்லை. இதனையடுத்து, தேமுதிகவின் பொருளாளர் பதவியை ஏற்று கட்சியை வழிநடத்திவருகிறார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. மேலும், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் நேரடி அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைகளுக்காக விஜயகாந்தை லண்டனுக்கு அழைத்துச் செல்ல பிரேமலதாவும் அவரது குடும்பத்தினரும் விரும்பியுள்ளனர். இதுகுறித்து குடும்ப மருத்துவர்களிடம் பிரேமலதா ஆலோசிக்க, "நீண்டதூர விமான பயணம் விஜயகாந்தின் உடலுக்கு நல்லதல்ல. விமானப் பயனத்தைத் தவிர்க்க வேண்டும். அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை இங்கேயே தரமுடியும். லண்டன் பயணத்தைத் தவிருங்கள்" என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, லண்டன் பயணத்தை சமீபத்தில் ரத்து செய்தார் பிரேமலதா. இதற்கிடையே, காசிக்குச் சென்று வழிபட்டு வருமாறு விஜயகாந்த் குடும்பத்தின் ஆன்மீக நலன் விரும்பிகள் பிரேமலதாவிடம் தெரிவித்துள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட பிரேமலதா, நேற்று (11.11.2021) இரவு தனது மகனுடன் சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்றுள்ளார். இன்று காலை காசி சென்றடைந்துள்ளனர். ஓரிரு நாள் காசியில் தங்கியிருந்து விஜயகாந்தின் உடல்நலம் முன்னேற்றமடைவதற்கான வழிபாடுகளை நடத்தி முடித்துவிட்டு சென்னை திரும்புவார் பிரேமலதா என்கிறார்கள் தேமுதிகவினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT