Advertisment

கழிவுநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்த கர்ப்பிணி! அரசு மருத்துவமனை வெளியே சோகம்

A pregnant woman who fell into a pit filled with sewage

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் ஆலங்காயம் - வாணியம்பாடி பிரதான சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. நேற்று பெய்த கனமழையால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள பள்ளத்தில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து தேங்கியுள்ளது.

Advertisment

இந்நிலையில், வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த கார்பினி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் வந்த போது அங்கு பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தைப் பள்ளத்தில் விட்டுள்ளார். அப்போது அந்த கர்ப்பிணி பெண் தடுமாறி பள்ளத்தில் விழுந்து பின்னர் தானே சுதாரித்து எழுந்துள்ளார்.

Advertisment

இதை அப்பகுதி இளைஞர்கள் தங்கள் செல் போனில் படம் பிடித்து இதை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

TIRUPATTUR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe