Chithra

சென்னை சூளைமேடு சௌராஸ்த்ரா நகர் 8வது தெருவை சேர்ந்தவர் 30 வயதான பானுமதி. நிறைமாத கர்ப்பிணியான இவர் வீட்டில் கணவர் இல்லாத சமயத்தில் அதிகாலை 3 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் வலி தாங்க முடியாமல் தானே நடந்து சென்று ஆட்டோ பிடிப்பதற்காக சூளைமேடு நெடுஞ்சாலைக்கு வந்துள்ளார். வலி தாங்க முடியாமல் துடித்த அவர், சாலை ஓரம் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.

Advertisment

அச்சமயம் சூளைமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சித்ரா இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். நிலை தடுமாறி விழுந்த கர்ப்பிணியான பானுமதியை பார்த்துள்ளார். உடனே பானுமதியை நோக்கி ஓடிவந்த காவல் ஆய்வாளர் சித்ரா, சுற்றும் முற்றும் பார்த்துள்ளார். அப்போது அங்கு அருகில் இருந்த குப்பை சேகரிக்கும் பெண்ணை உதவிக்கு அழைத்தார்.

Advertisment

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு நேரம் இல்லை என்பதால், அந்த பெண்ணின் உதவியுடன், காவல் ஆய்வாளர் சித்ரா பிரசவம் பார்த்துள்ளார். பானுமதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனிடையே 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் அங்கு வந்த 108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளரிடம் தாயையும் சேயையும் பத்திரமாக ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் சித்ராவின் துரிதமான சேவையை பொதுமக்கள் மட்டுமல்லாமல், காவல்துறையைச் சேர்ந்த பலரும் பாராட்டியுள்ளனர்.

Advertisment