ga21

சென்னை அரசு மருத்துவமனையில் மாயமான கர்ப்பிணி பெண், திருத்தணியில் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர்.

Advertisment

சென்னை திருவல்லிக்கேணி லால்முகமத் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகர். கால் டாக்சி டிரைவர். இவர் தனது உறவினரான காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்காயத்ரி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியை கடந்த 15ம் தேதி இரவு திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் சுதாகர் அனுமதித்தார்.

Advertisment

அப்போது காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள், இன்று (ஞாயிறு) அல்லது நாளை (திங்கள்) குழந்தை பிறக்கும் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்துவிட்டு, அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதால் சுதாகர் இரவு வீடு திரும்பினார்.

மறுநாள் காலை, மனைவியை பார்க்க சுதாகர் வந்தபோது, பிரசவ வார்டில் மனைவி இல்லை என்றதும், அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது காயத்ரி நடைப்பயிற்சிக்கு சென்றிருப்பதாக கூறியுள்ளார்கள். உடனே இவர் மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்துள்ளார். மருத்துவமனை முழுவதும் காயத்ரியை காணவில்லை.

Advertisment

இதையடுத்து உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்களும் காயத்ரி இங்கு வரவில்லை. காயத்ரியை பற்றி தகவல் தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளனர். பின்னர் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது மனைவியை காணவில்லை, என திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுதாகர் புகார் அளிதார்.

gayathri

புகாரை பெற்ற போலீசார் இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து மாயமான காயத்ரியை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் காயத்ரி திருத்தணியில் உள்ளதாகவும், குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும் உறவினர்களுக்கு போன் செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கு விரைந்துள்ளனர். திருவல்லிக்கேணி போலீசார், திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்து அங்கு காயத்ரியை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவர்களும் திருத்தணி விரைந்துள்ளனர்.