Advertisment

கண் முன்னே பலியான கர்ப்பிணி மனைவி; கதறித் துடித்த கணவன்

Pregnant woman lost their live in front of eyes; Screaming husband

Advertisment

சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று மாத கர்ப்பிணி பெண் கணவன் கண்முன்னே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஜீத் - ஐஸ்வர்யா தம்பதியர் இரும்பு சேகரித்து அதன் மூலம் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் திருமணமாகி ஆறு மாதம் ஆகிய நிலையில் ஐஸ்வர்யா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் மீஞ்சூர் நோக்கி இரும்பு துகள்கள் சேகரிக்க டூவீலரில் சென்ற நிலையில் பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஐஸ்வர்யா உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த அஜித் கண்முன்னே மனைவி இறந்து கிடப்பதைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுதது காண்போரை மனமுடையச் செய்தது.

உடனடியாகசம்பவ இடத்திற்குவந்த போலீசார் தப்பி ஓட முயன்ற லாரி டிரைவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கால் முறிந்த நிலையில் அஜித்மீட்கப்பட்டுதற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மீஞ்சூர் அருகே நிகழ்ந்த இந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

police minjur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe