மதுரையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாக கூறி சவுக்கால் அடித்து ஆடையை களைந்து சித்திரவதை செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

மதுரையை அடுத்த நரசிங்கம் பாதிரியார் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், இவரது மனைவி முத்து பாண்டியம்மாள். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. முத்துப்பாண்டி அம்மாள் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். தினமும் குடித்துவிட்டு விஜயகுமார் மனைவி முத்துப்பாண்டி அம்மாளுடன்தகராறில் ஈடுபடுவதால் மன உளைச்சல் அடைந்துள்ளார் முத்து பாண்டியம்மாள். இந்த தகராறு அடித்து உதைத்து சண்டை போடும் அளவிற்கு முற்றியது. கணவன் தாக்கியதில் காயமடைந்த முத்துப்பாண்டி அம்மாள் வீட்டுவேலைகளை செய்யக்கூட இயலாமல்வீட்டில் படுத்தேகிடந்துள்ளார். இதனால் தன் மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக நண்பர்களிடம் தெரிவித்த விஜயகுமார் அவருடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து முத்துப்பாண்டி அம்மாளின் தாயாரை வரவழைத்து ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று பேய் ஓட்டலாம் எனக் கூறியுள்ளார்.

Advertisment

mdaurai

இதனையடுத்து விஜயகுமாரின் மாமியார் மற்றும் அவரது இரு நண்பர்களுடன் தனது மனைவியை கைக்குழந்தைகளுடன் மந்திரவாதி இல்லத்திற்கு கூட்டிச் சென்று உள்ளார். அப்பன்திருப்பதி பகுதியிலுள்ள செல்வம் என்ற மந்திரவாதியிடம் மனைவியையும், குழந்தையையும் பூஜைக்காக அமர வைத்துவிட்டு இவர்கள் வெளியில் காத்திருந்தனர். உள்ளே பல்வேறு சாமி படங்கள் மாட்டி வைத்திருந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவதாகவும், சாமி ஆடுவதாகவும் கூறி வந்த செல்வம் கையில் சவுக்கை எடுத்து பூஜையைதொடங்கி உள்ளார்.

mdaurai

mdaurai

இரவு 7 மணியிலிருந்து 11 மணி வரை கோடாங்கி அடித்து பேயைவிரட்டுவதாக கூறி முத்துப்பாண்டி அம்மாளைசரமாரியாக சாட்டையால் அடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் அவரது உச்சந்தலையில் இருந்து சில முடிகளையும் பிடுங்கி உள்ளனர். பேயை ஓட விடுவதாக கூறி முத்துப்பாண்டி அம்மாளின்சேலையை உருவி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த மந்திரவாதி. இந்நிலையில் வலி தாங்க முடியமால்அரை நிர்வாண நிலையில் தனது கைக் குழந்தையையும் தூக்கிக்கொண்டு ஓடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் முத்துப்பாண்டி அம்மாள். நடந்தவற்றை கூறி காவலில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisment

mdaurai

உடனடியாக மந்திரவாதியின் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் மந்திரவாதி செல்வம் அவரது கணவர் விஜயகுமார் அவரது இரு நண்பர்களான சேவுகபாண்டிய, சுப்பிரமணி ஆகியோரை கையோடு பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பேய் ஓட்டுவதாக கூறி கர்ப்பிணி பெண்ணை அடித்து உடைத்து மானபங்கப்படுத்திய சாமியார் மீதுவழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் சிறையில் அடைத்தனர்.