Advertisment

கர்ப்பிணி மனைவி, 6 வயது மகள் கொலை; கணவனின் கொடூர செயல்

Pregnant wife, 6-year-old daughter ; Husband's cruel act - sensation in Karur

ஆறு மாத கர்ப்பிணி மனைவி மற்றும் 6 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற கணவர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரூரில் ஜவுளி ஏற்றுமதி தொழில் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் செல்வகணபதி. தென்காசியைச் சேர்ந்த செல்வகணபதி கடந்த ஆறு வருடங்களாக கரூர் வெங்கமேடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி கல்பனா ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாககூறப்படுகிறது. மகள் சாரதிபாலா (6).

Advertisment

இன்று காலை மனைவி மற்றும் 6 வயது மகள் இருவரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு செல்வகணபதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெங்கமேடு காவல்நிலைய போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். பூச்சிமருந்து குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வகணபதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கணவனே மனைவியையும் பெற்ற மகளையும் கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. என்ன பிரச்சனை காரணமாக கொலை நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident police karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe