Pregnant student! Youth arrested in Pocso

Advertisment

திருச்சி மாவட்டம், முசிறி காட்டுப்புத்தூர் மனஜமேடு பகுதியைச் சேர்ந்தவர் மருதைவீரன். இவரின் மகள் அதே ஊரில் 12ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், கரோனா காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டதால், அவர் சின்ன பள்ளிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அதே தோட்டத்தில் பணியாற்றிய சின்னப்பள்ளி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன்(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது அவர்களுக்குள் நட்பாக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்தி சிறுமியிடம் ஆசை வார்த்தைக் காட்டி, பாண்டியன் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு கடந்த மே மாதம், திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட அவரின் பெற்றோர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கருவுற்றுள்ளதாகவும், தற்போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம், சிறுமிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.