Advertisment

கர்ப்பிணி காதலியைத் தவிக்கவிட்ட காதலன்... காவல் நிலையத்தில் கரம் பிடித்தார்!

pregnant pudukkottai district vadakadu police station

Advertisment

காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணோடுதிருமணம் என்றதும் தப்பி ஓடிய காதலனைத் தேடிப் பிடித்து வந்து காதலியுடன் திருமணம் செய்து வைத்து அறிவுரைகள் சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் போலீசார். இதையடுத்து உறவினர்களும் ஒற்றுமையாக அழைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சேர்வைகரன்பட்டியைச் சேர்ந்த பிரபு அதே கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த புனிதா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். காதல் வரம்பு மீறி நான்கு மாதக் கர்ப்பிணியானார். இதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள புனிதா வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இவர்களின் காதலுக்குப் பிரபுவின் பெற்றோர்கள் எதிர்ப்புதெரிவிக்கவே கடந்த மாதம் முன்பு பிரபு தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் ஒரு மாத காலமாகத் தேடி வடகாட்டிலேயே மற்றொரு வீட்டில் தலைமறைவாக இருந்தபோது இளைஞர் பிரபுவை நேற்று கைது செய்தனர். தான் புனிதாவைத் திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

Advertisment

http://onelink.to/nknapp

இதனையடுத்து இரு தரப்பு உறவினர்கள், முன்னிலையில் வடகாடு காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாஸ் மற்றும் போலீசார் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்து அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.

MARRIAGE FUNCTION police station pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe