'Preference for those educated in the Tamil way'- 19 Resolutions to fulfill tvk

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் தொடங்கியுள்ளது. கொடி அறிமுக விழாவின் பொழுது வெளியிடப்பட்ட 'தமிழன் கொடி பறக்குது' என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.இன்னும் சற்று நேரத்தில் கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது பறை ஆட்டம் உள்ளிட்டபாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்மேடையில் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல்; மின் கட்டண உயர்வு; நீட் தேர்வு உள்ளிட்டவைகளை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாகவும், சட்ட ஒழுங்குப் பிரச்சினை; மகளிர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் மொழிக் கொள்கையைப் பொறுத்தவரை தமிழகத்தின் வளர்ச்சிக்கு இருமொழிக் கொள்கையை தேவை என தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சியில் பெண்களுக்கு படிப்படியாக முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம். மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் என தீர்மானங்கள் கொண்டுவரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment