Advertisment

ஷூட்டிங் ஸ்பாட்டான அரசு மருத்துவமனை; ஆபரேஷன் தியேட்டரில் வெட்டிங் ஷூட்!

pre Wedding shoot in operation theater in government hospital in Karnataka

அரசு மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டரில் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய ஜோடியினால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Advertisment

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அபிஷேக் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராகப் பணிக்குச் சேர்ந்து பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் தனது திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டை மிகவும் வித்தியாசமாக எடுக்கத் திட்டமிட்ட மருத்துவர் அபிஷேக், அவர் பணியாற்றும் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டில் இல்லாத ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் நோயாளி ஒருவர் படுத்திருக்கும்படியும், அவருக்கு அபிஷேக் மருத்துவம் பார்க்கும்படியும் உள்ளது. கூடவே அவரைத்திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணும் இருந்துள்ளார்.

இந்த போட்டோ ஷூட் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்கும் இடத்தில் அபிஷேக் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, அவரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Doctor karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe